எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. விஜய் பற்றி பேசிய வம்சி

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் வசூல் ரீதியாக சாதனை படைத்ததாக பலரும் கூறிவருகின்றனர். இதனால் விஜய், நெல்சன் இருவருமே மிகுந்த மனவருத்தத்தில் உள்ளனர்.

அவர்களுக்கு மட்டுமல்லாது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த விஜய் ரசிகர்களுக்கும் இப்படம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இந்நிலையில் விஜய் அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதாவது விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளார்.

வம்சி தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் தளபதி 66 படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறுகையில் விஜய்யின் பழைய படங்களின் சாயலில் இப்படம் இருக்கும் என்றும் மேலும் காதல், சென்டிமென்ட் கலந்த படமாக இருக்கும் கூறினார். இந்நிலையில் தளபதி 66 படம் எரோட்டோமேனியா என்ற நோயை வைத்து கதைக்களம் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய வம்சியிடம் தளபதி 66 படத்தை பற்றி பலரும் தகவல் கேட்டனர். அதற்கு வம்சி தளபதி 66 படத்தை பற்றி பேசவே பயமாக இருக்கிறது. மேலும் படத்தைப் பற்றி இப்போது பேசினால் அது சரியாக இருக்காது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறினார்.

மேலும், கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் எனவும் வம்சி கூறியுள்ளார். பீஸ்ட் படத்தால் அப்செட்டில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு தளபதி 66 படத்தின் அப்டேட்டால் மகிழ்ச்சியில் உள்ளனர்.