தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு பெற்றன. ஒரு காலத்தில் வில்லன், காமெடியன் என இரண்டிலுமே கலக்கி வந்தார் என்று தான் கூற வேண்டும்.

அதுவும் வில்லனாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதன் பிறகு தொடர்ந்து ஆனந்தராஜ் பல படங்களில் நடித்து வந்தார். இயக்குனர்கள் பலரும் ஆனந்தராஜ் தங்களது படங்களில் வில்லனாக நடிப்பதற்கு காத்திருந்த காலங்கள் உண்டு. அந்த அளவிற்கு வில்லனாக பல படங்களில் நடித்தார்.

ஆனந்தராஜ் திரைத்துறையில் வில்லனாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர். மேலும் இவர் காமெடியாகவும் பேசுவார் எனவும் பல பிரபலங்கள் கூறியுள்ளனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விட்டால் அதற்கு அப்படியே மாறாக வில்லனாக தனது நடிப்பு வெளிப்படுத்துவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் பல படங்களில் நடித்துள்ள ஆனந்தராஜ் இதுவரை எந்த ஒரு நடிகையுடன் கிசுகிசுக்க படவில்லை எனவும் மேலும் அந்த அளவிற்கு ஆனந்தராஜ் யார் கூடவும் நெருக்கமாக பழகியதில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் அனைவரிடமும் சகஜமாக பழகுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஆனந்தராஜ் ஒரு நல்ல மனிதர் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஆனந்தராஜ் தற்போது ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருவது அனைவரும் பிடித்திருப்பதாகவும் ஆனால் ஆனந்தராஜ் வில்லனாக இனிமேல் நடிக்க வேண்டும் எனவும் ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.