எந்த சீசனிலும் இல்லாமல்.. பிக் பாஸ் சீசன்5 போட்டியாளர்களை கண்டு அதிருப்தி அடையும் கமல்!

விஜய் டிவியில் எப்பொழுதும் பிரபலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். கடந்த இரண்டு சீசன்களில் மக்கள் மத்தியில் வேற லெவல் ரீச் அடைந்தது . தற்போது அதே எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டதுதான் பிக் பாஸ் சீசன்5.

ஆனால் பிக் பாஸ் சீசன் 5 தொடங்கி ஆறு வாரங்களை கடந்த நிலையிலும் இன்னும் மக்களிடம் செல்வாக்கை பெறாமல் சுவாரஸ்யமற்ற நிகழ்ச்சியாக தான் ஒளிபரப்பாகி வருகிறது.இதற்குக் காரணம் போட்டியாளர்கள் இன்னும் தங்கள் உண்மை முகத்தை காட்டாமல் நடித்து வருவது தான் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

போன பிக் பாஸ் சீசன்களையும், அதற்கான விமர்சனங்களையும் போட்டியாளர்கள் நன்கு அலசி ஆராய்ந்து அதற்கு இணங்க தங்களை தயாரித்து வந்துள்ளனர். அந்த விதமாக வீட்டில் சண்டைகளை ஏற்படுத்தினால் மக்களுக்கு பிடிக்காது என்று பலரும் சண்டைகளை தவிர்த்து மிகவும் பொறுமையாக இருக்கின்றனர்.

எங்கு நாம் கோபப் பட்டுவிட்டால் மக்கள் மத்தியில் நமக்கு கெட்ட பெயர் ஆகிவிடுமோ என்று பயந்து பயந்து விளையாடுவதால் தான் போட்டி அவ்வளவு சுவாரஸ்யமானதாகவும் மக்களைக் கவரும் விதமாகவும் இல்லை.

இதுபற்றி கமல் வெளிப்படையாகவே போட்டியாளர்கள் இடம் பேசிவிட்டார். நீங்கள் அனைவரும் கேமின் புரிதல் இல்லாமல் விளையாடுவது போல் தெரிகிறது. மேலும் நீங்கள் இன்னும் உங்கள் உண்மை முகத்தைக் காட்டாமல் இருப்பது மக்கள் மத்தியில் நீங்கள் நடிப்பது போல் காட்டுகிறது எனப் பளிச்சென்று சொல்லிவிட்டார்.

இவ்வாறு ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே குழப்பமே கமலுக்கும் ஏற்பட்டு, பிக் பாஸ் சீசன்5 போட்டியாளர்களுடன் நேராகவே தன் உள்ளக் கருத்தை கேட்டு அசத்தியுள்ளார்

அரசியலுக்குள் நுழைய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்.. டான் படத்தால் வந்த சர்ச்சை

சிவகார்த்திகேயன் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள டான் திரைப்படத்தின் டிரைலர் தற்போது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட ...
AllEscort