எதிர்ப்பை மீறி சூர்யா செய்யும் செயல்.. பாலாக்கு இருக்கிற குடும்ப பிரச்சனையில இது வேறயா?

சூர்யா சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அவரின் படங்கள் சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்துக்களை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களாகவே அமைகிறது.

அந்தவகையில் தற்போது சூர்யா மற்றும் இயக்குனர் பாலா இருவரும் அடுத்த படத்திற்கான வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மதுரையில் பிரமாண்ட செட் போட்டு நடந்து வருகிறது. இதற்கு ஹீரோயினாக ஜோதிகாவே நடிக்கவிருக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே சூர்யா நடித்த ஜெய் பீம் படம் ஒடிடியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தினால், ஏற்பட்ட சர்ச்சையை விட படத்தை அவர் ஒடிடியில் ரிலீஸ் செய்ததற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கொடி பிடித்தனர்.

எல்லா எதிர்ப்பையும் மீறி சூர்யா, படத்தை ஒடிடியில் வெளியிட்டு லாபத்தை பெற்றார். அந்த படமே இவ்வளவு பிரச்சனையை ஏற்படுத்திய போதிலும் அதைப் பற்றி கவலைப்படாமல் சூர்யா- பாலா கூட்டணியில் உருவாகிவரும் படத்தையும், ஒடிடியில் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர்கள் சூர்யாவின் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று பிரச்சனை செய்து வருகிறார்கள். அதையும் மீறி பல போராட்டங்களுக்குப் பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகி போதுமான வரவேற்பை பெறவில்லை. இதனால் அடுத்த படத்தில் மீண்டும் ஒடிடி பக்கம் சென்று தியேட்டர் உரிமையாளர்களின் எதிர்ப்பை பெறுகிறார் சூர்யா.

ஒருவேளை சூர்யா தியேட்டரில் வெளியாகும் படம் சரியாக ஓடுவதில்லை என்ற சென்டிமென்ட் பார்க்கிறாரோ என்னமோ. ஆனால் பாலாவிற்கு இப்பொழுது வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதில் வேறு இந்த படம் ஒடிடியில் வெளியாகும் என்றால் இருவருக்கும் பல பிரச்சினைகள் காத்துக் கொண்டிருக்கிறது.