எதிர்ப்பு அதிகரித்ததால் ஜெய்பீம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்.. வைரல் புகைப்படம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வரும் படம் தான் ஜெய் பீம். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஜெய் பீம் படம் இருளர் இன மக்களுக்காக ஆதரவு குரல் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

விமர்சன ரீதியாக ஜெய் பீம் படத்திற்கு பல்வேறு தரப்பினரும் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், சிலர் இப்படத்திற்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகிறார்கள். அதன்படி படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி இயக்குனர் கெளதமன், வன்னியர் சங்கம் உள்ளிட்டோர் படத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள்.

அதன்படி ஜெய் பீம் படத்தில் வரும் கொடுமைக்கார காவலரை வன்னியராக காட்சிப்படுத்தி இருப்பதாக அவர்கள் புகார் கூறி வருகிறார்கள். அதற்கேற்றவாறு படத்தில் ஒரு காட்சியில் அந்த காவலரின் வீட்டில் உள்ள காலண்டரில் அக்னி கலசம் இடம் பெற்றிருக்கும். இந்த அக்னி கலசம் வன்னியர்களின் குறியீடாம். அதனால் தான் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தொடர்ந்து படத்திற்கு அதிகமான எதிர்ப்புகள் உருவாகவே இயக்குனர் உடனடியாக அக்னி கலசம் இருக்கும் காலண்டரை மாற்றி லட்சுமி படம் வரைந்த காலண்டர் இருக்குமாறு அந்த காட்சியை மாற்றி அமைத்து விட்டார். இதன் பின்னரே பிரச்சனை சற்று தணிந்துள்ளது.

இதுபோன்ற படங்கள் எடுக்கும் போது இயக்குனர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சாதி ரீதியாக நாம் செய்யும் சிறு தவறுகளால் மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே இதுபோன்ற படங்களை கையாளும் போது இந்த மாதிரி சிறு சிறு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது என எதிர்பார்க்கப்படுகிறது சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

டாப் ஆங்கிள் செல்பி வெளியிட்ட ராய் லட்சுமி.. உடல் எடையை குறைத்த வைரல் புகைப்படம்

கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஆனால் காஞ்சனா படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ...