இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் உருவான திரைப்படம் சூது கவ்வும். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி வி குமார் இப் படத்தை தயாரித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்த இத் திரைப்படம் காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படம் ஆகும். 2 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது.

படம் வெளியாகி 3 கோடி லாபம் கிடைத்தால் போதும் என்ற கணிப்பில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. ஏனென்றால் சூது கவ்வும் படம் வெளியான அன்று தான் எதிர்நீச்சல் படமும் வெளியானது. தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியானது எதிர்நீச்சல் திரைப்படம்.

இதன் காரணமாக போட்ட முதல் கிடைத்தால் போதும் என்று தயாரிப்பாளர் நினைத்துள்ளார். அதற்கு ஏற்றால் போல் படம் வெளியான அன்று 8 லட்சம் மட்டுமே வசூல் ஆனது. ஆனால் எதிர்நீச்சல் படம் முதல் நாள் வசூல் 4 கோடியை தாண்டியது. அதனால் சிறிது பதட்டத்துடனே படக்குழுவினர் இருந்துள்ளனர்.

அதற்கு அடுத்தடுத்த நாட்களில் சூது கவ்வும் படம் வசூலில் முன்னேறியுள்ளது. படம் வெளியாகி வார இறுதியில் 5 கோடி வரை லாபத்தை ஈட்டியுள்ளது. இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸின் மொத்த வசூல் 35 கோடி ஆகும். இது படக்குழுவினரே எதிர்பாராத ஒன்றாகும்.

மேலும் இந்தப் படம் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் மிகவும் பெருமையாக கூறியுள்ளார்.