எக்ஸ்ரே புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட மாகாபா ஆனந்த்.. பதறிப்போன ரசிகர்கள்

தற்போது இறுதிக் கட்டப் போட்டிக்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் போட்டியாளர்களை கொண்டு நடக்கவிருக்கும் நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர் சீசன் 8. இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவியின் ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இச்சூழலில் கடந்த எபிசோடில் கலந்து கொண்ட ஆங்கர் மாகாபா ஆனந்த் தனது கையின் கட்டை விரலில் கட்டு போட்டுக்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். கை விரலுக்கு என்ன ஆயிற்று என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமல்லாமல், ‘அது இது எது’ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் நடுவராகவும், மேலும் வெள்ளித்திரையில் கதாநாயகனாகவும் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து கோ ஆங்கரிங் செய்து கொண்டிருந்த பிரியங்கா தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதனால் மாகாபா ஆனந்துடன் கோ ஆங்கராக தீனா களமிறங்கியுள்ளார். மாகாபா ஆனந்த் தனது கைவிரலில் ஏற்பட்டிருக்கக்கூடிய எலும்பு முறிவை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எக்ஸ்ரே புகைப்படத்தின் மூலம் ‘thumbs up taste the thunder’ என்று பதிவு செய்துள்ளார்.

இதனால் இவரிடம் விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பல பிரபலங்கள் ‘take care, get well soon’ என்று கூறி வருகின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதிஉள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்களும் இவரை நலம் விசாரித்து வருகின்றனர்.