எஃப்ஐஆர் போல சிக்கலில் மாட்டிய பீஸ்ட்.. புக்கிங் போட்டுடோம்னு பக்கு பக்குனு இருக்குல

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இப்படத்தின் ட்ரைலர், பாடல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. பீஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக படக்குழு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் விஜய் சின்னத்திரையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு சன் டிவியில் பிரத்தியேக பேட்டி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பீஸ்ட் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் படத்திற்கு குவைத், கத்தார் போன்ற அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

இப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாக அரபு நாடுகளில் ரிலீஸ் செய்ய தடை விதித்தது. இந்நிலையை பீஸ்ட் படமும் அரபு நாடுகளில் ரிலீஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதால் குவைத், கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகளில் பீஸ்ட் படம் வெளியாக தடை விதித்துள்ளனர்.

இதேபோல் இந்தியாவிலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். பீஸ்ட் படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இந்த சிக்கலை எப்படி கையாள்வது என தெரியாமல் படக்குழு விழிபிதுங்கி நிற்கிறது.

மேலும் பீஸ்ட் படத்தின் மூலம் நல்ல லாபம் பார்க்கவேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும் பல திட்டங்கள் கைவசம் வைத்துள்ளனர். ஆனால் தற்போது பீஸ்ட் படம் வெளியாகுமா என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் படக்குழு மற்றும் விஜய் ரசிகர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.