திகிலான பேய் திரைப்படங்களை ஒரு தியேட்டரில் தனியாக அமர்ந்து பயப்படாமல், தைரியமாக பார்ப்பவருக்கு பலவிதமான பரிசுகளோ அல்லது பரிசாக பணமோ வழங்கப்படுகிறது. இவ்வாறான பந்தயம் பல காலமாக நடைமுறையில் உள்ளது.

அதாவது, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த படம் ‘மாயா’. எனவே மாயா படத்தை தனியாக அமர்ந்து பார்ப்பவருக்கு ரூபாய் 5 லட்சம் தருவதாக கூறி இருந்தனர். அதேபோல், தற்போது தனியாக பேய் படங்களை பார்ப்பவர்களுக்கு 1300 டாலர்கள் தருகிறார்களாம்.

பல ஆண்டுகளாக இதே போல் தனியாக ஏதேனும் திகில் திரைப்படத்தை  பார்த்தால் பரிசு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து finance buzz (பைனான்ஸ் பஸ்) நிறுவனம் தனியாக 13 பேய் படங்களை காண்பதற்கு  1300 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின்படி 95,500 ரூபாய் பரிசு பணமாக கொடுக்கின்றனர். அத்துடன் பரிசுத் தொகையுடன் 50 டாலர் கிப்ட் கார்டும் தரப்பட உள்ளது.

இவர்கள் உலக அளவில் மக்களை மிகவும் பயமுறுத்திய திகிலான பேய் திரைப்படங்களை தேடி தேடி கண்டுபிடித்துள்ளனர். Paranormal Activity, Anabella, Sinister, Saw, Insidious, A Quiet Place, A Quiet Place part 2, The Blair Witch Project, Candyman, The Purge, Getout, Halloween போன்ற உலகையே அச்சுறுத்திய 13 திகில் திரைப்படங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இவர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து திரைப்படங்களையும் பார்க்க தைரியமுள்ள நபருக்கு மாயா படத்தில் கண்டது போலவே இருதயத் துடிப்பு, கண் இமைப்பது, கண்மூட கூடாது போன்ற நிபந்தனைகளுடன் நிபுணர்களால் கண்காணிக்கப்பட்ட பிறகே அந்த பரிசுப் பணத்தை தருவார்கள் என கூறப்படுகிறது.

இதுபோன்று பரிசு பணத்துக்காக ஆசைப்பட்டு இந்த பேய் படங்களை பார்க்கச் சென்ற பலரும் ஹார்ட் அட்டாக் வந்திருந்ததாக பல சர்ச்சைகள் வெளிவந்தன. தனியாக இந்த பேய் படங்களை பார்க்கின்ற தில்லுள்ளவர்கள் செப்டம்பர் 26ம் தேதிக்குள் அவர்களின் அப்ளிகேஷனை சமர்ப்பிக்க பைனான்ஸ் பஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.