உற்சாக குத்தாட்டம் போடும் தம்பதியினர்.. போட்டி, பொறாமையில் தனுஷ், ஐஸ்வர்யா செய்யும் செயல்

தனுஷும், ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி தனுஷும், ஐஸ்வர்யாவும் சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.

பிரிவு அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் சாங்கை இயக்கியிருந்தார். இதனை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தனுஷ் பகிர்ந்து என்னுடைய சிறந்த நண்பருக்கு பாராட்டுகள் என பதிவிட்டிருந்தார். விவாகரத்துக்கு பின்னும் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றார்கள் என அவர்களுடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவாகரத்திற்கு பின்னர் தான் சந்தோஷமாக உள்ளதை காட்ட நடிகர் தனுஷ் சில சில்மிஷ வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இருவரும் பங்கேற்ற ஒரு பார்ட்டியில் அவரின் கண் முன்னே பல பெண்களுடன் உற்சாகமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.

விவாகரத்துக்கு பின் தன்னுடைய பழைய காதலிகள், நெருங்கிய பெண் நண்பர்கள், தொடர்புடைய பெண் தொகுப்பாளினிகள் என பலருடன் தனுஷ் ஊர் ஊராக சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இது ஐஸ்வர்யாவை வெறுப்பு ஏற்ற மட்டுமே அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னர் ஐஸ்வர்யா திருமண முறிவிற்கு பின், தான் சந்தோஷமாக இருப்பதை காட்டி கொள்ள இவரும் தன் மகன்களுடன் இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சைக்கிளிங்கில் அதிக விருப்பமுள்ள அவர் சைக்கிளிங் செல்வது போன்ற பல்வேறான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்திருந்தார்.

இதற்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வந்துள்ளனர். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே நடிகர் தனுஷ் இவ்வாறாக செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் பொது வெளியில் அறிவித்து, ஒருமனதாக பிரிந்துள்ள நிலையிலும் இவ்வாறு செய்து வருவது சிலருக்கு எரிச்சலை கூட்டியுள்ளது.