உருவாகும் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம்.. கதையின் லாஜிக்கை சொன்ன நெல்சன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த நிலையில் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது.

மேலும், இப்படத்திற்காக விஜய் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள், போஸ்டர் என அனைத்தும் வெளியாகி சாதனை படைத்த வந்தது. ஆனால் பீஸ்ட் படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். ஏனென்றால் இப்படத்தில் விஜய் நடித்த வீரராகவன் கதாபாத்திரம் இரண்டாம் பாகம் எடுக்கும்படி தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் விஜய் சம்மதித்தால் இரண்டாம் பாகம் வெளியாகும் என நெல்சன் தெரிவித்தார்.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் மறுபக்கம் பீஸ்ட் முதல்பாகமே இவ்வளவு நெகட்டிவ் கமெண்டுகளை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தேவையா என நெல்சனை பலர் விமர்சித்து வருகிறார்கள். இதனால் இப்படம் உருவாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் தற்போது விஜய், நெல்சனுக்கு போன் செய்து வெற்றி, தோல்வி என்பது சாதாரணமான ஒன்று. நீங்கள் விமர்சனத்தை மனதில் வைத்துக்கொண்டு கவலைப்பட வேண்டாம், நாம் மீண்டும் இணைந்து ஒரு படத்தை பணியாற்றலாம் என கூறியுள்ளாராம். இது பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமா அல்லது வேறு ஒரு புதிய படமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் 66வது படத்தை வம்சி பைடிபல்லி இயக்கயுள்ளார்.

மேலும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயுள்ளார். மேலும் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் உடன் மீண்டும் விஜய் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.