உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தனிஷா முகர்ஜி. இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெற்றி அடைவதற்கு ஒருபக்கம் வினய் காரணமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் தனிஷா முகர்ஜி ஒரு காரணமாக இருந்தார். இவருடைய குறும்புத்தனமான நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்தது.

சமீபத்தில் பலரும் நெபடிசம் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறிவந்தனர். அதற்கு தனிஷா முகர்ஜி பிரபலங்களின் மகன்கள் மற்றும் மகள்கள் சினிமாவில் நடிக்க வந்தால் உடனே பலரும் நெபடிசம் பற்றிதான் கூறி வருகின்றனர். ஆனால் இதில் எந்த அளவிற்கு பிரச்சினை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியவில்லை எனக் கூறினார்.

அதாவது பிரபலங்களின் மகன்களாக இல்லாதபோது அவர்கள் சினிமாவில் கஷ்டப்பட்டு தனது முயற்சியின் மூலம் முன்னேறி விடுகிறார்கள். ஆனால் அதே பிரபலங்களின் மகன்கள் மற்றும் மகள்கள் சினிமாவில் முன்னேறுவது சாதாரண விஷயம் கிடையாது என கூறியுள்ளார். அதாவது தனிஷா முகர்ஜி குடும்பத்தினர் பலரும் நடிகைகளாக உள்ளனர். என் அம்மாதான் தனிஷாவும் என் அக்கா கஜோல்லும் என் மாமா அஜய்தேவ்கன் உட்பட பலரும் நடிகராக உள்ளனர்.

அதே குடும்பத்தில் தான் நானும் இருக்கிறேன். ஆனால் என்னால் பெரியளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை. சினிமாவில் சாதிப்பதற்கு பிரபலங்களின் மகன்கள் மற்றும் சாதாரண ஆட்கள் எல்லாம் கிடையாது. திறமை இருந்து முயற்சி செய்தால் யாராக இருந்தாலும் சினிமாவில் சாதிக்கலாம் என கூறினார்.

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமான தனிஷா முகர்ஜி. அதன் பிறகு பெரிய அளவில் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் சமீப காலமாக பார்ட்டி நிகழ்ச்சிகள் மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றி வருகிறார். தற்போது இவர் அவரை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.