இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக  வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். அது தற்போதைக்கு விஜய் படங்கள் தான் அதிக அளவில் வசூல் செய்ததால் அவருக்கு நம்பர் ஒன் பட்டத்தை தமிழ் சினிமா வட்டாரம் வழங்கியுள்ளது. பிற்காலத்தில் விஜயை விட யார் அதிகம் வியாபாரமாகும் நடிகராக வலம் வருகிறார்களோ அவர்களுக்கு அந்த இடம் தானாகவே சென்று விடும்.

விஜய் இப்போது மட்டுமல்ல ஒரு கால கட்டங்களில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த போதும் இடையில் அவ்வப்போது மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் பார்த்து பார்த்து நடித்து வந்தார். விஜய் தன்னுடைய கேரியர் வளர்ச்சியடைய நிறைய தெலுங்கு படங்களில் ரீமேக்கில் நடித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

அப்படி நடித்த படம்தான் குருவி. ஆனால் இந்த படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தை தயாரிப்பதன் மூலம் முதன்முறையாக சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். இவ்வளவு ஏன் உதயநிதி ஸ்டாலின் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் தயாரித்தால் விஜய் படத்தை தான் முதலில் தயாரிப்பு என அடம்பிடித்து அந்த படத்தின் மூலம் நஷ்டம் அடைந்தார்.

அந்த நஷ்டத்தை ஈடுகட்ட விஜய்யிடம் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் வந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் பெரிய அளவில் பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படம் நடிக்க ஆரம்பித்து விட்டதால் உதயநிதி ஸ்டாலினுடன் பழைய பகையை மறந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதற்கு சமீபத்தில் விஜய் போட்ட போன் தான் காரணம் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். உதயநிதி ஸ்டாலின் நடிகராக மட்டுமல்லாமல் சமீபத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி ஏற்றுள்ளார் என்பது தெரிந்ததே. அதற்கு வாழ்த்து சொல்லும் வகையில் மீண்டும் தன்னுடைய பழைய நட்பை புதுப்பித்து உள்ளாராம் விஜய். இப்போது விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து வரும் காலத்தில் விஜய் நடிக்கும் படத்தை மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறதாம்.