உதயநிதிகாக மட்டுமே ரகுமான் இறங்கி செய்யும் வேலை.. முக்கியமான முடிவில் இருந்து விலகல்

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஹிந்தியை ஏற்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா சொன்னதற்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான் ஒற்றை வரியில் பதில் அளித்து தற்போது அரசியல் வட்டாரத்திலும் சினிமாவிலும் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு, ஏஆர் ரகுமானின் ட்விட்டர் பதிவுகள் தற்போது ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ஏஆர் ரகுமான் ஆணித்தரமாக எடுத்த முடிவு ஒன்றை மாற்றியிருப்பது கோலிவுட் வட்டாரத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதாவது இசைப்புயல் ஏஆர் ரகுமான் இனி ஜாதி சம்பந்தமான படங்களுக்கு இசையமைக்க போவதில்லை என்ற ஒரு முடிவில் இருந்து வந்தார்.

அதன் விளைவாக பா ரஞ்சித், கொம்பன் முத்தையா போன்றவர்கள் இயக்கும் படங்களில் இருந்து சற்று விலகியே இருந்தார். ஏனென்றால் அவர்கள் இருவரும் பெரும்பாலும் ஜாதி சம்பந்தப்பட்ட திரைப்படங்களை இயக்கி, அதன்மூலம் சினிமாவின் புரட்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களைப் போன்றே படங்களை இயக்கும் மாரி செல்வராஜ் படத்திலும் இசையமைக்க முடியாது என்று ஏஆர் ரகுமான் கூறிவிட்டார். மாரிசெல்வராஜ் படத்தின் ஹீரோ உதயநிதி, அவர் ஏஆர் ரகுமானிடம் நேரடியாக பேசி சம்மதம் வாங்கி விட்டார்.

‘நீங்கள் இசையமைத்த படத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அதனால் நீங்கள் தான் இசையமைக்க வேண்டும்’ என உதயநிதியை ஏஆர் ரகுமானிடம் கேட்டுக் கொண்டாராம். ஆகையால் உதயநிதி ஸ்டாலின் இறங்கி வந்து ஏஆர் ரகுமானிடம் கேட்டதால் தனது முடிவில் இருந்து சற்று பின்வாங்கி, இப்பொழுது மாரி செல்வராஜ், உதயநிதியை வைத்து இயக்கும் படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் இனி உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியல்வாதியாக மாறி இருப்பதால், கடைசி கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்திலும், ஏஆர் ரகுமான் இசையிலும் இந்தப் படத்தை நடிக்க விரும்பி இருக்கிறாராம். ஆகையால் புது காம்போவில் உருவாகவிருக்கும் இந்த படத்தை குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களின் மத்தியில் படக்குழு எகிற விட்டுள்ளது.