உண்மையான ஜெய்பீம் சூர்யா,பார்வதி யார் தெரியுமா.? இணையத்தில் டிரெண்டாகும் வைரல் புகைப்படம்

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேற்று இரவு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இருளர் இன மக்களின் அறியாமையை சிலர் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை மிகவும் உணர்வுப்பூர்வமாக ஜெய் பீம் படம் வெளிப்படுத்தி உள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாகி உள்ளது.

அதன்படி இப்படத்தில் வழக்கறிஞராக வரும் நடிகர் சூர்யாவின் சந்துரு கதாபாத்திரமும், பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவியாக வரும் நடிகை லிஜோமோல் ஜோஸின் பார்வதி கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இவர்களின் இருவரின் கதாபாத்திரம் மட்டுமின்றி இவர்களின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தனது கணவருக்கு நீதி கிடைக்க போராடும் ஒரு கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ள நடிகை லிஜோமோல் ஜோஸ் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். பல இடங்களில் அவர் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் நிஜ வாழ்க்கை நீதிபதி சந்துரு மற்றும் பார்வதியின் புகைப்படங்களை ஜெய் பீம் படத்தில் வரும் சூர்யா மற்றும் லிஜோமோல் ஜோஸ் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் டிரண்ட் செய்து வருகிறார்கள். படம் வெளியானது முதல் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விரக்தியில் திரைத்துறையே வேண்டாம் என ஒதுங்கிய கலைஞர்.. சமாதானப்படுத்திய எம்ஜிஆர்

20 வயது முதல் இருந்தே தமிழ் சினிமாவில் சுமார் 75 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கலைஞர் மு கருணாநிதி. இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் கால்பதித்த 5 முறை தமிழக ...