உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கலாமா.. பேட்டியில் விஜய் போட்ட குண்டு

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தனது ரசிகர்களை சன் டிவியில் பேட்டி மூலம் மகிழ்வித்து உள்ளார் நடிகர் விஜய். மேலும் நாளை வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆரவாரத்துடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில், விஜய் பேட்டி கொடுத்தது ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மேலும், பீஸ்ட் படத்தின் வசூலில் பாதியை இந்த பேட்டியிலேயே பார்த்துவிடலாம் என சன் டிவியும் பலே திட்டம் போட்டு இருந்தது. அதேபோல் இந்த பேட்டியும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் சென்றது. இதில் நெல்சன் விஜய்யிடம் பல கலகலப்பான கேள்விகளைக் கேட்டிருந்தார்.

அதற்கு எப்பொழுதும் போல விஜய் தனது கிண்டலான பதில்களை அளித்திருந்தார். ஆனால் இந்தப் பேட்டி ஒரு பிரீப் பிளானட் நிகழ்ச்சி மாதிரி இருந்தது. ஏனென்றால் எல்லா கேள்விகளும் செயற்கையாகவே இருந்தது. முன்னதாகவே பேசி வைத்துக்கொண்டு இந்த கேள்விக்கு இது தான் பதில் என்று கூறுவது போல இருந்தது.

மேலும் அதில் சில கேள்விகளுக்கு விஜய் மேலோட்டமாகவே பதில்களை கூறினார். உதாரணமாக ரசிகர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல போகிறீர்கள் என்ற கேள்விக்கு விஜய் மழுப்பலாக மேலோட்டமாக பதில் சொல்லிவிட்டு போய்விட்டார். மேலும் அரசியலுக்கு வருவீர்களா என நெல்சன் விஜய்யிடம் கேட்டார்.

ஏற்கனவே விஜய் தந்தையின் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியது தான் அந்தச் செய்தி பூதாகரமாக வெடித்து விஜய் மற்றும் அவர் தந்தைக்கு இடையே மிகப் பெரிய பிரச்சனை நடந்தது. இந்த கேள்விக்கு விஜய் என்ன சொல்லப் போகிறார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருந்தனர்.

நான் விஜய் ஆக இருந்ததை மக்கள் தான் என்னை தளபதியாக மாற்றினார்கள். அதேபோல் தலைவன் ஆக மாற்றுவது என்றாலும் அது ரசிகர்கள் கையில் தான் இருக்கின்றது என்ற பதிலைக் கூறி விஜய் அசத்தினார். இதைக் கேட்ட ரசிகர்கள் தளபதிக்கு ரொம்ப தைரியம் தான் ஆளும் கட்சி இருப்பிடத்திலேயே இருந்துகொண்டு அவர்களுக்கே இப்படி ஒரு பதிலை சொல்லி ஷாக் கொடுத்திருக்கிறார் என கூறிவருகிறார்கள்.

ஏனென்றால் தற்போது பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரித்துள்ளது. அதேபோல் இந்த பேட்டியும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பொழுது ரசிகர்களுக்காக கண்டிப்பாக அரசியலில் வருவது போன்ற விஜயின் பதில் ஆளும்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.