உடல் எடையை குறைத்தும் நொந்து நூடுல்ஸ் ஆன ஹன்சிகா.. 50வது படத்திற்கு வந்த சிக்கல்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோட்வானி. விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். ஆரம்பத்தில் பருமனாக இருந்த ஹன்சிகா தற்போது படு ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு தற்போது ஹன்சிகாவுக்கு கிடைக்கவில்லை. சமீபகாலமாக அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. தற்போது ஹன்சிகாவின் 50வது படமான மகா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.

மகா படத்தின் ரிலீஸுக்காக ஹன்சிகா காத்துக் கொண்டிருக்கிறார். மகா படத்தின் ரிலீஸ் தள்ளி போவதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடையே உள்ள பிரச்சனை தான் காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஹன்சிகா மோத்வானி மகா படத்தைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் மகா படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த ஹன்சிகா ரிலீஸ் தள்ளிப்போவது எனக்கு ஏமாற்றமாக தான் உள்ளது. ஆனால் இது என்னுடைய 50வது படம், இதனால் இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என ஹன்சிகா பதிலளித்துள்ளார்.

மேலும், தற்போது தன்னுடைய 55 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது நம் கையில் இல்லை. மகா படத்தின் தாமதமும் படத்திற்கான வெற்றியை பெற்று தரும். மேலும் மகா படத்தின் ரிலீஸுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன் என ஹன்சிகா கூறியுள்ளார்.

ஹன்சிகா தமிழில் மகா படத்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் இப்படம் அவருக்கு கை கொடுக்கிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்நிலையில் ஹன்சிகா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்