உங்க அக்கப்போர் தாங்கல.. கன்டன்ட் இல்லாமல் கண்டதை உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்த கொண்டாட்டம் வரிசையாக நடைபெற்ற ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினர். ஆகையால் தற்போது மூர்த்தி-தனம் இவர்களது கை குழந்தை பாண்டியனுக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு அழுது கொண்டே இருக்கிறான்.

இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன செய்வது என்பது தெரியாமல் 3 வயது குழந்தையை கையில் வைத்திருக்கும் மீனா, தனக்கு அனைத்தும் அத்துப்படி என்ற எண்ணத்தில் பாண்டியனை வாங்கி காய்ச்சல் மருந்து கொடுத்து சரியாகிவிடும் என்று கூறி அனைவரையும் சமாதானப்படுத்துகிறாள்.

இருப்பினும் பாண்டியனுக்கு அழுகை குறைந்ததே ஒழிய, காய்ச்சல் குறையவில்லை. அதன்பிறகு மூர்த்தி மீனாவிடம். கயல் பாப்பாவிற்கு காய்ச்சல் அடிக்கடி வருமா? என்று கேட்க, ஏன் காய்ச்சல் வரணும்னு ஆசைப்படுகிறீர்களா! என மூர்த்தியை மீனா பட்டுனு பேசி விடுகிறார்.

ஆனால் மூர்த்தி குழந்தைக்கு சரியாகிவிடும் இதெல்லாம் சகஜம் தான் என மீண்டும் கூறியதனாலே இப்படி ஒரு கேள்வியை கேட்டார். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத மீனா மூர்த்தி கேட்டதற்கு வில்லங்கமாக யோசித்து பதிலளித்தது வீட்டில் இருப்பவர்களுக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது.

எனவே தற்போது வெளியாகியிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் காய்ச்சலையே கதற விடுவாங்க போல என்று கிண்டல் அடிக்கின்றனர்.

அத்துடன் கூட்டுக் குடும்பத்தை மையமாகக்கொண்டு ஒளிபரப்பும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை சமாளிப்பது கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.