உங்கள எப்படி கரெக்ட் பண்றது செல்லம்.. ரசிகரின் கேள்விக்கு அசந்துப்போற மாதிரி பதில் சொன்ன சந்தியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீரியல். இதில் ஹீரோயின் கேரக்டரில் விஜய் டிவியின் பிரபலமான ஆலியா மானஸா நடித்து வந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பதில் நடிகை ரியா அந்த கேரக்டருக்கு மாற்றப்பட்டார்.

ஆலியா மானசா கர்ப்பமாக இருந்த காரணத்தால் இந்த சீரியலில் அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. தற்போது இந்த சீரியலில் ரியா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ரியாவை ரசிகர்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை.

அதனால் தற்போது குழந்தை பிறந்த பிறகு ஆலியா மீண்டும் சீரியலுக்கு திரும்ப வேண்டும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் சில ரசிகர்கள் ரியாவின் நடிப்பு நன்றாக உள்ளது என்று அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரியாவிடம் சோசியல் மீடியாவில் ஒரு ரசிகர் எக்குத்தப்பான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதாவது அந்த ரசிகர் நீங்க இவ்ளோ அழகா இருக்கீங்க, உங்கள எப்படி உஷார் பண்றது. நீங்களே எனக்கு ஒரு நல்ல டிப்ஸ் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

பொதுவாக நடிகைகள் இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நாசுக்காக இருந்து விடுவார்கள். ஆனால் அந்த ரசிகரின் கேள்விக்கு ரியா ஓப்பனாக பதிலளித்துள்ளார். அதாவது அவரின் கேள்விக்கு நான் ஆல்ரெடி கமிட்டெட் என்று அவர் பதிலளித்துள்ளார்.

இந்த பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் அவர் கூறும் அவருடைய அந்த காதலர் யார் என்று இப்போதே சோசியல் மீடியாவில் தேட ஆரம்பித்துவிட்டனர். மாடலிங் செய்து வந்த ரியாவுக்கு இந்த சீரியல் வாய்ப்பு பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் விஷால் மூலமாகத்தான் கிடைத்தது என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் இருவரும் நீண்ட காலமாகவே நண்பர்களாக இருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் எழில் தான் ரியாவின் காதலர் என்று முடிவு செய்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.