இவங்க 2 பேரு தான் பிக்பாஸில் செமையா,கெத்தா விளையாடுறாங்க.. பைனல் வரவும் சான்ஸ் இருக்கு

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இப்போதுதான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அதில் இந்த விளையாட்டை புரிந்து கொண்டு விளையாடுவது ஒரு சில போட்டியாளர்களே. பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே இந்த விளையாட்டின் யுக்தியை சிலர் நன்றாகவே புரிந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு  சில  போட்டியாளர்கள் விளையாட்டைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் அபிஷேக்கின் இயக்கத்திற்கு ஏற்ப ஆடுகிறார்கள். மேலும் பிரியங்கா மற்றும் அபிஷேக்  இருவரும் திறமையாகவே காய் நகர்த்துகிறார்கள். இந்த பிக்பாஸ் விளையாட்டு மிகப்பெரிய சவாலான போட்டி. இதில் எதிரியை எதிரியாக நினைத்து விளையாடினால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

அதை விட்டுட்டு எனக்கு அக்கா மாதிரி, அம்மா மாதிரி என்று சென்டிமென்ட் பேசி சும்மா சீன் போட்டாலாம் வேலைக்காகாது. இந்த பிக்பாஸ் கேமே மறந்து போயிடும். பாக்குறவங்க எல்லாம் முட்டாள் கிடையாது ஒரு சென்டிமென்ட் வைத்து ஓட்டுப் போட்டு செலக்ட் பண்றதுக்கு.

இந்த விஷயத்தை எல்லாம் விட்டுட்டு விளையாட்டுல கான்சன்ட்ரேட் பண்ணி விளையாடினால் அவர்கள் இறுதி வரைக்கும் செல்ல வாய்ப்பு உண்டு. பிரியங்கா மற்றும் ராஜு இவர்கள் இருவரும் இறுதிவரை வரவேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாகவும் உள்ளது.

பிரியங்கா தனித்து விளையாடினால் இறுதிப்போட்டி வரை வருவார் என்று தெரிகிறது. வரும் நாட்களில் இவர்கள் என்ன மாதிரியான யுக்தியை கையாளுகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வாலி படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம்.. அப்பவே தல வேற ரகம்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணி இல்லாமல் தன்னம்பிக்கையாலும், முயற்சியாலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் கேரியரில் மிக முக்கியமான படம் வாலி. இப்படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என ...