இந்திய சினிமாவையே தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இளையராஜா. இன்று என்னதான் பாடல்கள் வந்தாலும் இப்பவும் மதிய வேளையில் இளையராஜா பாடல்களை கேட்டு வேலை செய்யும் ஆட்கள் ஏகப்பட்ட பேர் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பேருந்து சின்ன சின்ன டீக்கடை என எங்கு பார்த்தாலும் இப்பவும் இளையராஜாவின் இசை மட்டும்தான்.

அப்படிப்பட்ட இளையராஜா உச்சத்தில் இருந்த நேரத்தில் தான் அனைவரது பார்வையும் ஏ ஆர் ரகுமான் என்பவர் மீது விழுந்தது. ஏ ஆர் ரஹ்மானும் சும்மா சொல்லக்கூடாது. அவருக்கு தெரிந்ததை வைத்து ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து கொண்டிருக்கிறார். இப்போதைக்கு இசையில் மூத்தவர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான்.

அப்பேர்ப்பட்ட ஏ ஆர் ரகுமான் இளையராஜாவின் சிஷ்யன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இளையராஜாவை விட்டு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக மாறியதற்கு மணிரத்னத்தின் பங்கு மிகப் பெரியது என்கிறது சினிமா வட்டாரம். எப்போதுமே திறமையை எங்கிருக்கிறதோ அங்கு கர்வமும் இருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். அது இளையராஜா விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே இருப்பதாக கூறுகின்றனர்.

அப்படி ஒருமுறை இளையராஜா மற்றும் மணிரத்னம் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு வர உங்களுடைய சிஷ்யனை வைத்து நான் இசை அமைத்துக் கொள்கிறேன் என ஏ ஆர் ரகுமானை கையோடு கூட்டிக் கொண்டு சென்றாராம் மணிரத்தினம். ஏ ஆர் ரகுமான் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் வந்த முதல் படமான ரோஜா படத்தின் ஆல்பம் வெற்றி பற்றி சொல்லி தெரிய வேண்டுமா என்ன.

அப்போது ஏ ஆர் ரகுமான் பெயர் திரும்பிய பக்கமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் வகையில் இளையராஜாவிடம் சென்று நிறைய பேர் குச்சி கொளுத்தி போட்டுள்ளனர். போற போக்கை பார்த்தால் அந்த பையன் உங்களை விட வளர்ந்து விடுவான் போல என எவ்வளவோ அவரை உசுப்பேற்றி ஏ ஆர் ரகுமானின் கேரியரை காலி செய்ய பல வேலை பார்த்தனர். ஆனால் இளையராஜா போ அவனுக்கு திறமை இருந்தால் அவன் நீண்ட காலம் சினிமாவில் இருப்பான் அதை யாராலும் தடுக்க முடியாது எனக்கூறி தன்னிடம் புறம் பேசியவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்து விட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு குறிப்பிட்ட சமூக வலைதள சேனலில் தெரிவித்துள்ளார்.