இளையராஜாவுக்கே போட்டியா?.. இவ்வளவு வருட அனுபவத்திற்கு போட்டியாக வரும் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் ஒரு இசை ஜாம்பவான் என்றால் அது இளையராஜா மட்டுமே. கிட்டத்தட்ட 78 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் அவர் சினிமாவில் 47 வருட கால அனுபவத்தை பெற்றுள்ளார்.

இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 80 காலகட்ட தமிழ் சினிமாவில் இவர் பாடல்கள் தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

இவரைப் போலவே இன்று ஒரு இளம் இசையமைப்பாளரும் தன்னுடைய விஜய் பயணத்தில் பல சாதனைகள் புரிந்து வருகிறார். சொல்லப்போனால் மிகச் சிறு வயதிலேயே தன்னுடைய இசை பயணத்தை ஆரம்பித்த இவர் இன்று முன்னணி இசையமைப்பாளராக தன் பெயரை நிலைநாட்டியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தான். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி என்ற பாடல் தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் மூலம் அவர் வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து இன்று முன்னணி இசையமைப்பாளராக மாறியிருக்கிறார்.

இளையராஜா அந்த காலத்தில் தமிழ் ரசிகர்களை ஆட்சி செய்ததை போலவே இவரும் இப்போது தமிழ் ரசிகர்களை தன்னுடைய இசையால் மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் இசையமைத்த அரபி குத்து பாடல் பயங்கர ட்ரெண்ட் ஆனது. தற்போது சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்களும் இந்தப் பாடலுக்கு ஆடி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

சில காலங்களுக்கு முன்பு வரை எப்படி இளையராஜா ரஜினி, கமல் என்று மாறி மாறி பல நடிகர்களுக்கும் பிஸியாக இசையமைத்து வந்தாரோ அதேபோல் தற்போது அனிருத் ரஜினி, கமல், விஜய், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், அஜித் என்று வரிசையாக பிரபல நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார். இதை வைத்து பார்க்கும் பொழுது இளையராஜா போல் இல்லாமல் அவரையே தூக்கி சாப்பிடுவார் என்று தெரிகிறது.