இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தான் பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி ஒரு சரித்திர படமாக உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. பாகுபலி படத்தை போலவே இப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

சரித்திர படம் என்பதால் இப்படத்தில் நடிப்பதற்காக அனைத்து நடிகர்களும் தங்கள் தலைமுடியை நீளமாக வளர்த்திருப்பதால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் தவிர்த்து வந்தார்கள். இதனால் அவர்களின் பிரச்சனையை கருத்தில் கொண்ட இயக்குனர் மணிரத்னம் சரியாகத் திட்டமிட்டு, இரண்டு பாகங்களுக்கான காட்சிகளையும் ஒவ்வொரு நடிகருக்கும் முடித்துக் கொண்டே வந்தார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம், ரஹ்மான் ஆகியோர் தங்களுடைய காட்சிகளை நடித்து முடித்து விட்டார்கள். ஜெயம் ரவி கூட இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது தனது காட்சிகளை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டாராம்.

இதுகுறித்து கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இளவரசி த்ரிஷா, நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. ஜெயம் ரவி இளவரசேசசசச.. என் பணியும் முடிந்தது! என தெரிவித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், முத்தையா இயக்கத்தில் உருவாகும் விருமன் படத்தின் படப்பிடிப்பில் கார்த்தி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.