இளம் நடிகருடன் பிரியா பவானி சங்கர் காதலா? கடுப்பில் உண்மை காதலர்

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். தமிழில் தாண்டி தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருக்கின்றன. இத்தனைக்கும் இன்னும் அவர் கிளாமர் காட்டி நடிக்கவில்லை. இருந்தாலும் படவாய்ப்புகள் வருவது மற்ற நடிகைகளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளதாம்.

செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல் நடிகையாக வலம் வந்து தற்போது சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார் பிரியா பவானி சங்கர். இவரது நடிப்பில் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியான ஓமன பெண்ணே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்தப்படத்தில் பிரியாவுக்கு ஜோடியாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார்.

ரொமான்டிக் காமெடி திரைப்படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் போட்டோ சூட் டுகளில் இருவரும் ரொமான்டிக் போஸ் கொடுத்தது இருவருக்குள்ளும் காதல் என்ற பிம்பத்தை கோலிவுட் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி களிலும் இருவரும் நீண்ட நாட்கள் பழக்கம் போல் பேசிக் கொள்வதும் விளையாடி கொள்வதும் அந்த சந்தேகத்தை உறுதி படுத்தி விட்டதாம்.

இப்போது பிரியா பவானி சங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இலைமறை காயாக தங்களது காதலை வளர்த்து வருகின்றனர் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். இந்த செய்தியை கேட்ட பிரியா பவானி சங்கர் ஏன் உண்மை காதலர் செம கடுப்பில் இருக்கிறாராம். நன்றாக போய்க் கொண்டிருக்கும் காதல் வாழ்க்கையில் இப்படி ஒரு புரளியை கிளப்புவதற்கு என்றே பல பேர் இருக்கிறார்கள் என செம அப்செட்டில் இருக்கிறாராம்.

பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து வருகிறார் எனவும் இருவரும் அடிக்கடி வெளிநாடு டூர் செல்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கையில் இந்த புதிய காதல் கதை எப்படி உருவானது என்பதே புரியாத புதிராக உள்ளது. இப்படித்தான் பிரியா பவானி சங்கர் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்த நிலையில் இருவருக்குள்ளும் காதல் என கிளப்பி விட்டனர்.

யார்ரா நீங்க எல்லாம்!