இளம் தலைமுறைகள் கெடுத்த புஷ்பா.. பல கோடி லாபம் பார்த்த பின் கேட்க வேண்டிய கேள்வியா இது!

கடந்த டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் பல எதிர்ப்புகளை மீறி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் சமுதாயத்தில் வளரும் இளைஞர்களை கெடுக்கும் விதத்தில் அக்கிரமங்களுக்கு முன்னுதாரணமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும் இலக்கியவாதியும் ஆன கரிகா பதி நரசிம்ம ராவ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதற்கேற்றார்போல் புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக இருக்கும் கதாபாத்திரத்தில் தர லோக்கல் ரவுடியாக நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தில் யாருக்கும் அடங்காமல் பொறுக்கித்தனம் செய்வதுபோல் அல்லு அர்ஜுன் மோசமாக நடித்திருப்பதாக நரசிம்மராவ் கூறியுள்ளார்.

மேலும் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படும் கடத்தல்காரன் எப்படி ஹீரோவாக ரசிகர்களுக்கு தெரிகிறார் என்று விளங்கவில்லை என காட்டமாக சோசியல் மீடியாவில் கொந்தளித்திருக்கிறார். இதை அப்படியே இளம் தலைமுறைகள் பார்த்து கேட்டு விட மாட்டார்களா, அந்த பொறுப்புணர்வு உங்களுக்கு கொஞ்சம் கூட இல்லையா எனவும் ஆதங்கப்படுகின்றனர்.

மேலும் திருடர்களுக்கு எப்படி திருடுவது என்றும், கள்ள கடத்தல்காரர்களுக்கு அது எப்படிப்பட்ட கவுரவமான தொழில் என்பதையும் சித்தரித்து மோசமான முன்னுதாரணத்தை சமூகத்திற்கு காட்டியிருக்கும் புஷ்பா படத்தை பார்க்கும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானால் அதற்கு மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனும், இயக்குனர் சுகுமாரும் பொறுப்பேற்பார்களா என்றும் சரமாரியாக நரசிம்மராவ் கேள்வி எழுப்புகிறார்.

இதையெல்லாம் விட ராஷ்மிகா மந்தனா, சமந்தா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு புஷ்பா படத்தில் ஆபாசமான உடை அணிந்து நடனம் ஆடி நடித்திருப்பது கொஞ்சம் கூட நல்லா இல்லை என்று புஷ்பா படத்தை குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் பலரது தரப்பிலிருந்து எழுப்பப்படும் சரமாரியான கேள்விக்கு படக்குழுவினர்கள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். இதுமட்டுமின்றி இப்படிப்பட்ட மோசமான ஆபாச காட்சிகளையும் கேவலமான வசனங்களையும் வைத்துதான் படத்தை எடுத்து சம்பாதிக்க வேண்டுமா என்றும் புஷ்பா படத்தை பார்த்த சிலர் திட்டி தீர்க்கின்றனர்.