இளம் இயக்குனரை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள அறிவிப்பு

சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூல் என்னும் மார்கெட்டை ஓபன் செய்து விட்ட இயக்குனர் தான் நெல்சன் திலீப் குமார். கோலமாவு கோகிலா மூலம் தமிழ்சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர். சிவாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அப்படியே சிவாவின் நண்பரான அனிருத்தோடும் இணைந்து தொடர்ந்து பயணித்து வருகிறார்.

தற்போது நெல்சன் பணியாற்றி வரும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கான புரோமோ வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஒரு இன்ப அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று கசிந்து உள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியை நெல்சன் இயக்கப்போகிறார் என்பது அனைவர்க்கும் தெரியும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படமாக அமைந்திருக்கும் இந்த படத்தினை பற்றிய முக்கிய அறிவிப்பு பிப்ரவரி 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகலாம் என்ற தகவல் கசிந்து இருக்கிறது. சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் ஹாட் ஆன செய்தி பரவி வருகிறது.

ரஜினி அடுத்தடுத்து இந்த வருடம் பல முக்கிய இயக்குனர்களோடு கை கோர்க்க இருக்கும் நிலையில் அதில் நெல்சன் முதல் தேர்வில் இருக்கிறார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் கடைசியாக ரஜினியை வைத்து தயாரித்த படம் அண்ணாத்த. இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் படம் வசூல் செய்த தொகை ரஜினிக்கு இன்னும் மார்கெட் குறையவில்லை என்பதையே காட்டியது.

நெல்சன் திலீப் குமாரின் டார்க் காமெடி கான்செப்ட் தமிழ் சினிமாவில் நன்றாக வேலை செய்கிறது. அவரும் ரஜினியும் இணையும் போது நடக்க போகும் மேஜிக் மேலும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது. அவரின் காமெடிகள் அனைத்தும் இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றார் போல் இருக்கிறது. அதனால் தான் இன்று காமெடி செய்து கலெக்சன் அள்ளலாம் என்ற டிரண்ட்டை உருவாக்கி இருக்கிறார்.

ரஜினியின் தீவிர வெறியனான அனிருத் இந்த படத்திலும் அவருக்கு இசையமைக்க இருக்கிறார். எனவே ரஜினி ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஒரே கொண்டாட்டம் என்று தான் சொல்லவேண்டும். “நெல்சன் வேற மாறி வேற மாறி” படம் இருக்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகின்றனர்