இளசுகளின் தூக்கத்தை கெடுத்த தமன்னா.. ஸ்டைலிஷாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன்னா. அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது ஒரு கட்டத்தில் விஜய், அஜித் மற்றும் சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற்று தமன்னாவிற்கு தனிப் பெயரும் பெற்றுக்கொடுத்தது. அது மட்டுமில்லாமல் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தினார்.

தமன்னா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆக்சன் இப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும் அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வராததால் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகைகள் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார்கள். அதிலும் பிரபலமான நடிகைகளை விடவே மாட்டார்கள் அவர்கள் போடும் புகைப்படங்கள் முதற்கொண்டு அவர்களுக்கு லைக் செய்து விடுவார்கள். தமன்னா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தமன்னா சமீபகாலமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவரது சமூக வலைதள பக்கத்தில் காரிலிருந்து இறங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் தமன்னா அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.