இருக்க கொஞ்சநஞ்ச பெயரையும் கெடுத்து விடாதீர்கள்.. பயத்தில் கட்டளை போட்ட பாகுபலி பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதன்பிறகு பிரபாஸ் இரண்டு, மூன்று படங்களில் நடித்தாலும் அது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை.

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ராதேஷ்யாம் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் பாகுபலி போன்ற ஒரு மாஸ் படத்தை கொடுத்து ரசிகர்களை கவர வேண்டும் என அதற்கு தகுந்த இயக்குனரை பிரபாஸ் தேடி வந்தார்.

பிரபல இயக்குனர் ஒருவருக்கு பிரபாஸ் தூது விட்டிருந்தார். தற்போது திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பி வரும் கேஜிஎப் 2 படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் தான் அது. தமிழகத்தில் மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தையே கே ஜி எஃப் படம் ஓரம்கட்டி உள்ளது.

மேலும் பீஸ்ட் படத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த திரையரங்குகளிலும் தற்போது கே ஜி எஃப் படம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகம் வெளியானபோது எனக்கு அந்த மாதிரி ஒரு படம் வேண்டும். அதேபோல் ஒரு படக்கதையை கொண்டு வாருங்கள் என்று கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீலுக்கு பிரபாஸ் தூது விட்டிருக்கிறார்.

பிரசாந்த் நீலிடம் கதைக்கா பஞ்சம். உடனே தான் ஏற்கனவே வைத்திருந்த ஒரு கதையை பிரபாஸ் இடம் சொல்லி ஓகே பண்ணியிருக்கிறார் பிரசாந்த் நீல். அந்தப் படமும் கேஜிஎப் போன்ற கதைக்களமாக இருந்ததால் பிரபாஸிற்கு அந்த கதை மிகவும் பிடித்துப் போனது.

இந்நிலையில் இப்பொழுது சலார் என்ற படத்தை கேஜிஎப் தோரணையில் இயக்கிக் கொண்டிருக்கிறார் பிரசாந்த் நீல். இப்படத்தில் பிரபாஸ், ஜெகபதி பாபு, சுருதி ஹாசன், பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே கே ஜி எஃப் 2 படம் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.