இருக்கு ஆனா இல்ல! வெற்றி இயக்குனரை பாடாய் படுத்தும் சிவகார்த்திகேயன்

முதலில் தனுஷிடம் ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் ஒரு கதையை கூறியிருந்தார். ஆனால் தனுஷ் அதில் ஒரு சில மாற்றங்கள் செய்யுங்கள் நீங்கள் சொன்ன கதை ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தின் சாயல் போல் இருப்பதாக தெரிகிறது. அதனால் கதையில் மாற்றம் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் ராம்குமார் அதில் மாற்றம் செய்ய விருப்பம் இல்லாமல் சென்றுவிட்டார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் அடுத்தடுத்த படங்களின் மீதான தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதனால் பல இயக்குனர்களும் தற்போது சிவகார்த்திகேயனிடம் தங்களது படங்களின் கதைகளை கூறி வருகின்றனர்.

இதனை மனதில் வைத்து இயக்குனர் ராம்குமார் தனுஷ் கதையை அப்படியே சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் படத்தின் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என கூறிவிட்டார். ஆனால் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன். அதனால் கொஞ்ச நாள் நீங்கள் காத்திருந்தால் நான் உங்கள் படங்களில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதனால் ராம்குமார் ஏற்கனவே மூன்று வருடங்கள் காத்திருந்து விட்டோம் இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க என தெரியாமல் தற்போது வருத்தத்தில் உள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் காத்திருக்க சொன்னதால் ராம்குமாருக்கு இந்த படத்தின் கதையை இயக்குவதற்கு விருப்பம் இல்லை என தற்போது சினிமாவில் இருப்பவர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

இதுதான் ஒரு நல்ல இயக்குனருக்கு வந்த சோதனை.