இரத்தக் கலரில் வெறியுடன் குத்திக்கொள்ளும் கீர்த்தி சுரேஷ்.. மிரட்டும் சாணி காகிதம் ட்ரைலர்

செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாணி காகிதம் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து 25 கொலைகளை செய்கின்றனர். பின்பு காவல்துறையால் மாட்டிக் கொள்ளும் இவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

படம் முழுக்க செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் துப்பாக்கியைவைத்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கொள்கின்றனர். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் இருவரும் கிராமத்தில் இருக்கும் நபர்களாக நடித்துள்ளனர்.

சாணி காகிதம் திரைப்படம் கண்டிப்பாக செல்வராகவனுக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரும் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள சாணி காகிதம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.