இரண்டே படங்களில் மட்டுமே நிகழ்ந்த சாதனை.. இளையராஜாவால் நிகழ்ந்த அற்புதம்

ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களையும், ஒருவரே பாடுவது என்பது அரிதான ஒன்று. அந்த வகையில் இளையராஜா இசையில் இரண்டே படங்களில் மட்டும்தான் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இளையராஜா இசையில் பாட்டுக்கள் அனைத்தும் ஹிட்டானது காசி திரைப்படம். இந்த படத்தில் விக்ரம் பார்வையற்றவராக நடித்திருப்பார். இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் மட்டுமே பாடி இருப்பார்.

இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்தது. பாடல்களை வைத்து மக்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒவ்வொரு பாடல்களிலும் வித்தியாசமான குரல் அம்சம் வேண்டுமென்று இசையமைப்பாளர்கள் ஆசைப்படுவார்கள். ஆனால் காசி திரைப்படத்தில் ஹரிஹரன் குரலில் தான் அனைத்து பாடல்களும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசையில் அமைந்த மற்றுமொரு படமானது சிந்துபைரவி. இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் பாடியது ஜேசுதாஸ். அவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தது

ஒருகாலத்தில் தன் குரலால் ஒட்டுமொத்த மக்களை கட்டிப்போட்டவர் ஜேசுதாஸ் இவருடைய பாடல்களும், இன்று வரை எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. காசி மற்றும் சிந்து பைரவி இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதற்கு முக்கியமான காரணம் பாட்டுகள் என்று கூட சொல்லலாம்.