இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ரஜினியை சந்திக்கும் நெல்சன்.. வெறித்தனமாக ரெடியாகும் அடுத்த படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தலைவர் 169 திரைப்படத்தை இயக்கவுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். இதனிடையே இத்திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் தோல்வியால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனின் இயக்கத்தின் தலைவர் 169 படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என்ற இரு மனதோடு இருந்து உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நெல்சனின் இயக்கத்தில் நடிப்பார் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நெல்சன் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை ரஜினியை நேரில் சந்தித்து தலைவர் 169 படத்தின் கதையை குறித்து விவாதித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியும் நெல்சன் சொல்லும் கதையில் சில மாற்றங்களை சொல்லிக்கொண்டே வருகிறாராம். ஏனென்றால் சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் ரசிகர்களுக்கு பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதனிடையே தலைவர் 169 திரைப்படத்தின் கதையை மும்முரமாக விவாதித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மேலும் நெல்சன் திலீப்குமார் நடிகர் தனுஷுக்கு ஒரு கதையை ரெடி பண்ணி உள்ளாராம். தற்போது நடிகர் தனுஷ் அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பாலிவுட் ஹாலிவுட் போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிஸியாக வலம் வருகிறார்.

இதனிடையே நெல்சன் தனுஷிடம் கதையைக் கூறியுள்ளார். தற்போது தன் கையில் உள்ள படங்களை முடித்துக் கொண்டு வருகிறேன் என நெல்சனிடம் கூறியுள்ளாராம். இந்த அப்டேட்டை கேட்ட தனுஷ் ரசிகர்களும் நெல்சன் இயக்கத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி வருகின்றனர்

மேலும் நெல்சன் திலிப்குமார் பீஸ்ட் படத்தின் விமர்சனங்களை முறியடிக்கும் விதமாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்திற்காக கதையை பிரம்மாண்டமாக எழுதிக்கொண்டு வருகிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. எது எப்படியோ சூப்பர் ஸ்டாரை வைத்து நெல்சன் நன்றாக படமெடுத்தால் சரி என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.