இரண்டு நாளில் 112 கோடி வசூலை தாண்டிய அண்ணாத்த.. தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகியுள்ள படம் தான் அண்ணாத்த. படம் வெளியான நாள் முதல் தற்போது வரை படம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ரஜினி ரசிகர்களை தவிர மற்ற யாரும் படத்தை பாராட்டவில்லை என்பது தான் உண்மை.

மேலும் சிவா இயக்கத்தில் ஏற்கனவே வெளியான விஸ்வாசம் வேதாளம் போன்ற படங்களை போல் அண்ணாத்த படம் இருப்பதாக கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்களை சந்தித்த போதிலும் அண்ணாத்த படம் முதல் நாள் மட்டும் அதுவும் தமிழகத்தில் மட்டும் சுமார் 34 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.

இதற்கு காரணம் ரஜினி மட்டும் தான். சூப்பர் ஸ்டார் என்றால் சும்மாவா. ரஜினி என்ற ஒரு தனிநபருக்காகவே அண்ணாத்த படம் இந்த அளவிற்கு வசூல் சாதனை படைத்துள்ளது. அவருக்காக மட்டுமே படம் பார்க்க வந்த ரசிகர்கள் தான் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் உலகளவில் அண்ணாத்த படம் இரண்டே நாளில் 100 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து விட்டதாம். அதன்படி உலகளவில் அண்ணாத்த படம் முதல் நாள் அன்று 70.19 கோடியும், இரண்டாம் நாள் அன்று 42.63 கோடியும் என மொத்தமாக 112.82 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதேபோல் தமிழகத்தில் முதல் நாள் அன்று 34.92 கோடியும், இரண்டாம் நாள் அன்று 27.15 கோடியும் என மொத்தமாக சுமார் 62.07 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அண்ணாத்த படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்திருந்தாலும், வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.