இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்கிறாரா செல்வராகவன்.? ஒரே ட்விட்டர் பதிவால் பரபரப்பு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் நடிகர் தனுஷின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக முன்னேறினார்.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

இதுதவிர படங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை இயக்குனராக மட்டுமே தமிழ் சினிமாவில் கலக்கி வந்த செல்வராகவன் தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் சாணிக்காயிதம் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்னொருவர் இருந்தால் தான் நிம்மதி என்று ஒரு பொழுதும் நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதைப் போல் ஒரு இம்சை எதுவும் இல்லை. தனிமையில் இருப்பதே பேரின்பம். பெரும் நிம்மதி” என பதிவிட்டுள்ளார் ‌.

தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. தனியாக இருப்பதே நிம்மதி என செல்வராகவன் கூறியுள்ளதால், ஒருவேளை அவரது மனைவியை விவாகரத்து செய்ய போகிறாரோ என கோலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.