இரட்டை வேடத்தில் கல்லா கட்ட போகும் தளபதி 66.. ஹீரோயின், இசையமைப்பாளர் யார் தெரியுமா.?

தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 முதல் திரைகயரங்குளில் ‘பீஸ்ட்’ மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராக உள்ளார். நெல்சன் இயக்கிய இந்த அதிரடி-காமெடி திரில்லர் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதற்கிடையில் விஜய் தனது 66 வது படத்திற்காக தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று அழைக்கப்படும் டெஸ்ட் ஷுட்டிங்கை சில நாட்களுக்கு முன்பு முடித்துள்ளார். ரெகுலர் ஷூட்டிங் இந்த வாரம் சிறிய ஷெட்யூலுடன் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்ஷி பைடிப்பள்ளி இந்த தமிழ்-தெலுங்கு என இருமொழியில் உருவாகும் படத்தை இயக்கியுள்ளார். இது தமிழின் முன்னணி நடிகரான விஜய்யின் முதல் டோலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 படத்தில் விஜய் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் இளமையான தோற்றத்திலும் மற்றொருவர் எரோடோமேனியாவால் பாதிக்கப்பட்டவராக நடிக்கிறாராம். ‘அழகிய தமிழ் மகன்’, ‘கத்தி’, ‘பிகில்’ படங்களுக்குப் பிறகு விஜய் 4வது முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் இணைந்து படத்தில் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் திஷா பத்தானி ஆகியோர் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் “பீஸ்ட்” பிரமோஷனுக்காக சன் டிவி நேர்காணலில் பங்கேற்ற போது அவருடைய லுக் தான் இந்த தளபதி 66 படத்தின் லுக்காக இருக்குமா.? என ரசிகர்கள் யோசித்து வருகின்றன.

இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது, மேலும் டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான இவர் இப்படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.