இயக்குனர்களை பங்கு போடும் அஜித் விஜய்.. வசூலுக்காக போடும் பலே திட்டமா.?

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக போட்டி போடும் நடிகர்கள் என்றால் விஜய், அஜித். இந்த இரு நடிகர்களின் படம் வெளியாகிறது என்றாலே அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த போட்டி நிலவும். ஆனால் விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பல வருடங்கள் ஆகிறது.

ஆரம்பத்தில் இந்த இரு நடிகர்களின் படங்களையும் ஒரே இயக்குனர்களே இயற்றியுள்ளார்கள். ஆனால் சமீபகாலமாக அஜித்துக்கு என்று சில இயக்குனர்களும், விஜய் என்று சில இயக்குனர்களும் படம் கமிட்டாகி வருகிறார்கள். விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு, கௌதம் மேனன், ஹெச்.வினோத் ஆகியவர்கள் அஜித்தின் படத்தை இயக்கி வருகிறார்கள்.

அதேபோல் நெல்சன் திலிப்குமார், லோகேஷ் கனகராஜ், அட்லி ஆகியோர் விஜய் படத்தை இயக்கி வருகிறார்கள். இவ்வாறு இரு நடிகர்களும் வெவ்வேறு இயக்குனர்களை தேர்ந்தெடுப்பது பிசினஸ் காரணமாக இப்படி பண்ணுகிறார்கள் என்றால் அது இல்லை.

அஜித் விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் எல்லோரும் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் பண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் பல இயக்குனர்களுக்கு வாய்ப்பு தர முடியாது. அஜித்திற்கு இப்பொழுது இரண்டு வருடம் கழித்து தான் வலிமை படமே ரிலீசாகிறது.

அஜித், விஜய்க்கு ஒரு இயக்குனர் ஹிட் கொடுத்து விட்டால். அடுத்த படம் இயக்கும் வாய்ப்பையும் அவருக்கே கொடுக்கின்றனர். அப்படியானால் இதுவே 2 வருடம் ஆகி விடும். தற்போது கொரோனா பிரச்சனையால் படம் ரிலீசாவது தள்ளிப்போகிறது. இதனால் அவர்களால் நிறைய படங்கள் கொடுக்க முடியவில்லை. ஒருவேளை இவர்களும் வருடத்திற்கு 3 முதல் 4 படங்கள் கொடுத்தால், இவர்கள் லிஸ்டில் இல்லாத நிறைய இயக்குனர்கள் வாய்ப்பு பெறுவார்கள்.

விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்கள் எல்லோரும் வருடத்திற்கு 8 முதல் 10 படங்கள் கொடுக்கிறார்கள். அதனால் அவர்கள் நிறைய இயக்குனர்களிடம் சென்றுதான் ஆகவேண்டும். அஜித், விஜய்க்கு அந்த மாதிரி வாய்ப்புகள் அமைவதில்லை.