இயக்குனரிடம் பளார்னு அடி வாங்கிய வடிவேலு.. ஒரே ஒரு சாட்சி இவர் மட்டும்தான்

தமிழ் சினிமாவில் வடிவேலு ஒரு முக்கியமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது நடிப்பில் வெளியாகாத படங்களே இல்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் ஏராளமான படங்கள் நடித்து தனக்கென தனி ரசிகர்களை வைத்திருந்தார்.

ஆனால் சமீபகாலமாக வடிவேலு மீது பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்தன வடிவேலு சரியான நேரத்திற்கு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை மேலும் தேவையில்லாத குடைச்சல்கள் கொடுப்பது என தொடர்ந்து சேட்டைகள் செய்து வந்தார். இதனால் பல இயக்குனர்களும் கடுப்பாகி வைத்து படங்கள் எடுப்பதற்கு தயங்கி வந்தனர்.

வடிவேலு பழைய வில்லன் ஆன நம்பிராஜன் என்பவருக்கும் வடிவேலுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. பின்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்பு இருவருக்கும் இடையே கடுமையான கோபம் வர நம்பிராஜன் வடிவேலுவை பளார் என கன்னத்தில் அறிந்துள்ளார்.

இதனை பார்த்த ஒரே ஒருவர் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தான் இதனை அவரே ஒரு பேட்டியில் தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார். மேலும் இது எனக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் தெரியாது எனவும் பார்த்த ஒரே ஒரு ஆள் நான் மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த மாதிரி ஒரு சில பிரச்சினையால்தான் வடிவேலு அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாமல் போனார்எனவும். சரியாக அனைவரிடம் நடந்து கொண்டிருந்தால் தற்போது அவர் அதிகமான படங்கள் நடித்து இருப்பார் எனவும் கூறியிருந்தார். ஆனால் வடிவேலு தற்போது மீண்டும் படிக்க ஆரம்பித்தால் அடுத்த அடுத்த நிறைய படம் நடிப்பார் எனக் கூறி வருகின்றனர்.