இயக்குனராகும் மெல்லிசையில் கலக்கிய பிரபல இசையமைப்பாளர்.. உடனே கால்ஷீட் கொடுத்த டாப்ஸி

டாப்ஸி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் அனபெல் சேதுபதி. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் சேதுபதி மற்றும் டாப்ஸி இருவரும் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் மீது அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாப்ஸி பொறுத்தவரை எப்போதுமே எந்த நடிகர் நடிக்கிறார், யார் இயக்குகிறார் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தின் கதையில் தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை உணர்ந்து சம்மதம் தெரிவிப்பார். அதுமட்டுமில்லாமல் டாப்ஸி நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக இருக்கும்.

தற்போது தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான எஸ் ஏ ராஜ்குமார் டாப்சியிடம் ஒரு கதையை பற்றி கூறியுள்ளார். படத்தின் கதையை கேட்ட டாப்ஸி படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தது மட்டுமில்லாமல் உடனே அவருக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த இசையமைப்பாளர். படப்பிடிப்பை தொடங்குவதற்கு தற்போது முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள எஸ் ஏ ராஜ்குமார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதனால் தற்போது தெலுங்கு பக்கம் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் டாப்ஸி பல சண்டை காட்சிகளில் நடிக்க இருப்பதாகவும். முழுக்க முழுக்க டூப் போடாமல் அவரே நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.மேலும் இப்படம் கண்டிப்பாக டாப்ஸி மற்றும் எஸ் ஏ ராஜ்குமார் இருவருக்கும் ஒரு நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கும் எனவும் கூறி வருகின்றனர்.

அடுத்தடுத்து 5 இயக்குனர்களை தொக்கா தூக்கிய ரஜினி.. ரெண்டு வருஷத்துக்கு தலைவர் ராஜ்ஜியம் தான்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் அவர்கள் அடுத்து யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது. கூட்டணி என்றவுடன் மீண்டும் அரசியலிலா என்று நினைக்க வேண்டாம். அதான் அதெல்லாம் ...