விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகான். இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எப்படியாவது இப்படத்தினை வருகிற தீபாவளி அன்று வெளியிட வேண்டும் என படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காக பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு சாத்தியம் இல்லை என்று தான் கூற வேண்டும் தொடர்ந்து பல முன்னணி நடிகரின் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த படங்கள் வெளியான பிறகுதான் இவர்களுக்கு திரையரங்கில் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் தயாரிப்பாளர் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் OTT தளத்திற்கு தீபாவளி அன்று வெளியிட்டு விடலாம் என முடிவு செய்திருந்தார்.

இது எப்படியோ விக்ரம் காதிற்கு செல்ல உடனே தயாரிப்பாளரை அழைத்து படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு காரணம் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டால் தான் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கும். OTTதளத்திற்கு விற்றால் நினைத்த அளவிற்கு வரவேற்பு இருக்காது என கூறியுள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் வேறுவழியின்றி படத்தை திரையரங்கில் வெளியிடலாம் என கூறியுள்ளார். ஆனால் பிரம்மாண்ட தயாரிப்பாளர்களின் படங்கள் வெளியாக இருப்பதால் இப்படத்திற்கு நினைத்தபடி பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் மகான் படத்தை அடுத்த வருடம் வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

இதனைக்கேட்ட கார்த்திக் சுப்புராஜ் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் கூடிய விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.