இப்படி நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா.? பிரபல நடிகைக்கு சில்க் ஸ்மிதா கொடுத்த பதிலடி

சில்க் ஸ்மிதா காந்த பார்வையாலும், கவர்ச்சிகரமான சிரிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் பல இளைஞர்களைக் கட்டிப்போட்டவர். தற்போது அவர் இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் பலரது மனதில் சில்க் ஸ்மிதா வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வாறு தமிழ் சினிமாவையே ஒரு காலகட்டத்தில் தனக்குள் வைத்திருந்தவர் சில்க்.

சில்க் ஸ்மிதா தனது பள்ளிப்படிப்பை குடும்பத்தின் வறுமை காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்தி கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது பெற்றோர் சிறு வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்பு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் பொழுது சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அப்போதைய காலகட்டத்தில் சில்க் ஸ்மிதாவுடன் பயணித்தவர் கவர்ச்சி நடிகை ஷர்மிலி. இவர் சில்க் ஸ்மிதாவை பற்றி சில விஷயங்களை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆரம்பத்தில் ஷர்மிலி குட்டைப் பாவாடை அணிவது, கவர்ச்சியான உடைகள் அணிவதில் தயக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் ஷர்மிலி, சில்க் ஸ்மிதாவை நான் எப்போதும் அக்கானு தான் கூப்பிடுவேன் என குறிப்பிட்டிருந்தார். அப்போது அவரிடம் கவர்ச்சி உடையில் நடிப்பதற்கு எல்லா பெண்களுக்குமே தயக்கம் இருக்கும், அதே தயக்கம் எனக்கும் இருந்தது எனக் ஷர்மிலி கூறியுள்ளார்.

ஒரு நாள் அவரிடம் அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடுவதற்கு உங்களுக்கு கூச்சமா இல்லையா அக்கா என கேட்டுள்ளார். அதற்கு சில்க் ஸ்மிதா இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்க தான் எனக்கும் ஆசை. ஆனால் அப்படி நடித்தால் எவண்டி பார்ப்பான் என கேட்டார்.

சில்க் ஸ்மிதாவின் இந்த பதிலிலேயே அவருக்கு கவர்ச்சி நடிப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்பது ஷாமிலிக்கு தெரிய வந்தது எனக் கூறினார். மேலும் குடும்ப வறுமை காரணமாக தான் சில்க் ஸ்மிதா இதுபோன்ற கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்தார் என கூறினார்.