இனியா செய்த தரமான சம்பவம்.. கோபியுடன் கையும் காலுமாக மாட்ட போகும் ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் சென்றவார டிஆர்பி இல் முதலிடத்தை பிடித்துள்ளது. இத்தொடரில் பாக்கியலட்சுமி குடும்பம் பிக்னிக் செல்ல விரும்புகிறார்கள். மகள் இனியா வேண்டுகோளுக்கு இணங்க கோபியும் முதலில் பிக்னிக் வரச சம்மதிக்கிறார்.

ஆனால் ராதிகாவின் மகள் மயூ பிக்னிக் போக ஆசைபடுவதால் கோபி சொந்த மகளையே பற்றி கவலைப்படாமல் மயூக்காக ராதிகாவுடன் செல்ல சம்மதிக்கிறார். இந்நிலையில் கோபி வராததால் இனியா மிகுந்த வருத்தத்துடன் உள்ளார். இந்நிலையில் மறுநாள் பிக்னிக் செல்வதற்காக பாக்கியா அதிகாலையிலேயே எழுந்து எல்லோருக்கும் சாப்பாடு செய்கிறாள்.

காலையிலேயே கோபி ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அப்போது சமைக்க வில்லையா என்ன கோபி ராதிகாவிடம் கேட்க, வெளியே கிளம்புரதனால சமைக்க மூட் இல்லை என ராதிகா சொல்கிறாள். இதனால் கோபி, இதுவே பாக்கியா வா இருந்தா எல்லாத்தையும் அவளே ரெடி பண்ணி, எல்லாருக்கும் சாப்பாடு செஞ்சு வச்சு இருப்பா என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார்.

ராதிகாவின் இந்த நடவடிக்கையால் கோபி கொஞ்சம் மனவருத்தத்துடன் உள்ளார். இந்நிலையில் பாக்கியலட்சுமி குடும்பம் பிக்னிக்கு கிளம்பிவிட்டனர். அங்கு செழியனும், ஜெனியும் யாரோ ஒருவர் போல ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் தனியாக செல்கின்றனர்.

இந்நிலையில் இனியா ஏன் இவங்க ரெண்டு பேரும் பேசிகாமல் இப்படி போறாங்க என எழிலிடம் கேட்கிறார். அன்னைக்கு நடந்த சண்டையை இன்னும் ரெண்டு பேரும் மறக்கலை என எழில் கூறுகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக பின்னாடி இல் இருந்து வந்த இனியா, செழியன் மீது ஜெனியை தள்ளிவிடுகிறார்.

ஜெனியும் கீழே விழும்போது செழியன் அவரை தாங்கிப் பிடிக்கிறார். இதனால் இவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். தற்போது பாக்கியலட்சுமி குடும்பம் வந்திருக்கும் இதே ரிசார்ட்டுக்ககு கோபியும், ராதிகாவுடன் வர உள்ளனர். ஆனால் இதிலிருந்தும் கோபி தப்பித்துவிடுவார், எப்படித் தப்பிக்கிறார் என்பதுதான் பெரிய ட்விஸ்ட்.