நடிகை சமந்தா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் இருந்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் கோலிவுட் டோலிவுட் என அனைத்து பக்கமும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு சமந்தா விவாகரத்து பற்றிய செய்தி தற்போது தான் ஓரளவு குறைந்துள்ளது. இந்த நேரத்தில் சமந்தா எடுத்திருக்கும் திடீர் முடிவு மீண்டும் சர்ச்சையை கிளப்பி விடுமோ என்கிற சந்தேகத்தை கோலிவுட் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்னப்பா முடிவு பண்ணிட்டாங்க அப்படின்னு தானே கேக்குறீங்க.

சொல்றேன். திருமணத்திற்கு முன்பு வரை தன்னிஷ்டப்படி படங்களில் நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சி கிளாமர் காட்சி ஆகியவற்றில் நடித்து வந்த சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினர் மூலம் நிறைய நெருக்கடிகள் வந்ததாக தெரிகிறது. இதனால் முடிந்தவரை சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு கை கொடுத்ததா என்றால் சந்தேகம்தான்.

அப்படி ஒரேயடியாக கணவரின் குடும்பத்தாரின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருந்த சமந்தா முதல் முறையாக தனியே ஒரு முடிவு எடுத்து ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் ஒன்றில் அநியாயத்திற்கு மோசமான காட்சிகளில் நடித்தார். இதுவே அவர்களது விவாகரத்திற்கு முதல்படி என்கிறது சினிமா வட்டாரம். சமந்தா திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதை உணர்ந்த சமந்தா அடுத்தடுத்து பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பாலிவுட் படங்கள் என்றால் சொல்லவா வேண்டும் படுக்கை அறை காட்சியில் முதல் முத்தக்காட்சி வரை அனைத்துமே இடம்பெற்றிருக்கும். அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பதாக சமந்தா இயக்குனர்களுக்கு சத்தியம் செய்து பட வாய்ப்புகளை அள்ளி குவித்து கொண்டிருக்கிறாராம்.