நமக்கு பிடித்த நடிகர், நடிகையை ஒரு தடவையாவது நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அந்த நடிகர், நடிகைகளின் படங்கள் எங்கு ஷூட்டிங் நடக்கிறது என்பதை அறிந்து அங்கு ரசிகர்கள் குவிகிறார்கள்.

இதனால் ரசிகர் கூட்டத்தால் சில சமயங்களில் சூட்டிங் நிற்பதும் உண்டு. தன்னுடைய ஹீரோவுடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ரசிகரின் ஆசைக்கு இணங்க சில ஹீரோக்கள் ரசிகர்களுடன் சூட்டிங் ஸ்பாட்டில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள்.

அந்த வகையில் தளபதி விஜய் ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படத்தை சமூக வலைத் தளங்களில் பகிர வேண்டாம் என ரசிகர்களுக்கு கோரிக்கை வைப்பாராம். ஏனென்றால் போட்டோவை பகிர்ந்தால் அவருடைய கெட்டப் மூலம் படத்தின் கதை வெளியாகலாம் என்பதால் இணையத்தில் பகிர வேண்டாம் என்பாராம்.

விஜய் போலவே நடிகர் சூர்யாவும் அதை பின்பற்றுகிறாராம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

தளபதி போலவே சூர்யாவும் இந்த போட்டோவை சமூக தளங்களில் பகிர வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளாராம்.படம் முடியும் வரை இதுபோன்ற ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது தான் இயக்குனர்களுக்கும் நல்லது. இல்லை என்றால் இந்த கெட்டப்பை வைத்து சமூக வலைத்தளத்தில் பெரிய கதையை கட்டிவிடுவார்கள்.

எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்கள் தற்போது சூர்யாவுக்காக வரிசை கட்டி நிற்கின்றது ரசிகர்கள் இந்தப் படங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.