இந்த வாரம் பிக்பாஸில் வெளியேறப் போவது யார் தெரியுமா? விசபூச்சிக்கு கட்டம் கட்டிய ரசிகர்கள்

விஜய் டிவியின் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன்5 கோலாகலமாக ஏழாவது வாரத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் ஒரு போட்டியாளர் வீட்டிலிருந்து மக்களின் தீர்ப்பால் வெளியேற்றப் படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் 9 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் வழக்கம் போல் அபிநய், அண்ணாச்சி, இசைவாணி, சிபி, நிரூப், அக்ஷரா, ஐக்கி பெர்ரி மற்றும் புதிதாக தாமரைச் செல்வியும் தேர்வாகியுள்ளனர். இந்த முறை யார் வெளியேற அதிக வாய்ப்பிருக்கிறது என்று பார்த்தால் அபிநய், இமான் அண்ணாச்சி, இசைவாணி மற்றும் தாமரைச்செல்வி இவர்களுக்குத்தான் வீட்டிலிருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மேலும் சில வாரங்களாகவே கடைசியில் சேவாகி லக்கில் தப்பித்து விடுகிறார் அபிநய். ஆனால் தற்பொழுது தான் இவர் போட்டியை சரியாக விளையாடி சிறிது வெளியே தெரிய ஆரம்பித்ததால் இவர் இந்த முறையும் மக்களால் காப்பாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. இருந்தும் இன்னும் இவர் தன் கருத்துகளை ஆணித்தனமாக பதிய வைத்தால் தப்பிக்கலாம்.

அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டு வாரங்களாக சற்று ஓட்டிங்கில் பின்தங்கிய நிலையில் இருக்கும் அண்ணாச்சியும் வீட்டிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது. ஆனால் இசைவாணியும் பிரியங்காவும் இவரைத் தொடர்ந்து கார்னர் செய்து விளையாடுவதால் இவர் போட்டியை தொடரவும் மக்களின் செல்வாக்கை பெறவும் வாய்ப்புகள் அதிகம்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தபடியாக டேஞ்சர் ஷோனில் இருக்கிறார் தாமரை. ஏனெனில் இவர் சில வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் வராமல் தப்பித்து வந்த நிலையில் தற்போது இவர் தன் முன்கோபத்தால் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் போட்டியாளர்களையும் வெறுப்பேற்றி மக்களையும் வெறுப்பேற்றி வருகிறார்.

மேலும் இவர் எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல வீட்டுக்கு போகணும் என்று அடிக்கடி கூறிவருகிறார். இதனால் அதிர்ப்தி அடைந்து மக்களால் இவர் வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இவர்களையெல்லாம் விட கருத்துக்கணிப்பில் ஆணித்தனமாக வெளியேறப் போகிறவர் இசைவாணி தான் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் பாவனியுடன் இணைந்து விஷத் தன்மையாக மாறி வருகிறார் இசைவாணி என மக்கள் பலரும் கருதுகின்றனர். சில வாரங்களாகவே இசைவாணியின் நடவடிக்கை போட்டியாளர்களிடமும் மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் இவர் அண்ணாச்சி மற்றும் தாமரையிடம் சிறிது மரியாதைக் குறைவாக நடந்து இதனை உறுதிப் படுத்துகிறார்.

மேலும் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள ஓட்டிங் லிஸ்டிலும் இசை வாணியே பின்தங்கியுள்ளார். எனவே இவர் தான் மிகவும் டேஞ்சர் ஷோனில் இருக்கிறார். எனவே இவர்தான் வெளியேறுவார் எனவும் மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.