பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதி நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் பட்டியலில் 9 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் வழக்கம் போல் அபிநய், அண்ணாச்சி, இசைவாணி, சிபி, நிரூப், அக்ஷரா, ஐக்கி பெர்ரி மற்றும் புதிதாக நாமினேஷன் லிஸ்ட் இருக்கும் தாமரைச் செல்வி ஆகியோர் உள்ளனர்.

எனவே இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டின் படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து இசைவாணி வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் கடந்த சில வாரங்களாகவே உலக நாயகன் கமல் இசைவாணியை தொடர்ந்து வார்னிங் செய்து கொண்டிருக்கிறார். அதை அப்பொழுது ஏற்றுக்கொள்ளும் இசைவாணி, அதன் பிறகு மறந்து விடுகிறார்.

மேலும் கானா பாடகியான இசைவாணி தன்னுடைய திறமையை பிக்பாஸ் வீட்டில் காட்டாமல் சக போட்டியாளர்களுடன் சண்டை போடுவதிலும், மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருப்பதிலும் தன்னுடைய நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் சாண்டி மற்றும் தற்போது இருக்கும் ராஜு போன்றவர்கள் போல நல்ல என்டர்டைன்மென்ட்டராக இருப்பார் என்று தொடக்கத்தில் ரசிகர்கள் நினைத்தனர்.

அவ்வாறு இருக்காமல் இமான் அண்ணாச்சி, தாமரை போன்றோருடன் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே ரசிகர்களை வெறுப்பேற்றும் போட்டியாளர்களை எலிமினேஷனில் அலேக்காக ரசிகர்கள் தூக்கி கொண்டிருக்கின்றனர். இதைப் போன்றுதான் தற்போது இசை வாணியின் நிலைமையும் உள்ளது. இருப்பினும் நாளை மறுநாள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.