இந்த வாரம் காதல் திருமணத்தில் விஜய் டிவியின் 3 ஜோடிகள்.. இன்ஸ்டாவை அலற விடும் பாராட்டு மழை

விஜய் டிவியில் தொடர்களில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்கள். இதை தொடர்ந்து ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ், ஆலியா இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். விஜய் டிவியின் 3 பிரபலங்களுக்கு இந்த வாரம் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தைப் பார்த்தவுடன் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

சந்திரா: தமிழ் சினிமாவில் மனசெல்லாம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சந்திரா லட்சுமணன். இவருக்கு படங்கள் எதுவும் சரியாக கை கொடுக்காததால் சீரியலில் இறங்கிவிட்டார். விஜய் டிவியில் 2007 இல் ஒளிபரப்பான தொடர் தான் காதலிக்க நேரமில்லை. இத்தொடரில் பிரஜன் ஜோடியாக சந்திரா நடித்திருந்தார். இத்தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து மலையாள சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார். இத்தொடரில் சந்திராவுடன் நடித்த டோஷ் கிரிஸ்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் நேற்று கோலாகலமாக கேரளாவில் நடைபெற்றது.

ஆரியன்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் ஆரியன். ஆரியனும், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் கதாநாயகி ஷபானா இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் இருவருக்கும் எளிமையாக வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இருவரின் நண்பர்களே மட்டும் அழைத்து மிகவும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

மாளவிகா: விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மிகவும் பிரபலமானவர் மாளவிகா சுந்தர். இந்நிகழ்ச்சி மூலம் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக வலம் வந்தார். தற்போது 33 வயதாகும் மாளவிகா தன்னுடன் ஒரு வயது இளையவர் அஸ்வினை காதலித்து வந்தார். மாளவிகா திருமணத்திற்கு முன்பு தன் வருங்கால கணவருடன் லிப்-லாக் போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். தற்போது இவர்களது திருமணம் பிராமின் முறைப்படி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.