இந்த முரட்டு வில்லனுக்கு இப்படி ஒரு சாக்லெட் பாயா.. ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் மகன்

சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே வாரிசு நடிகர்கள் படங்களில் நடிப்பது வழக்கம். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்று தற்போது வரை நிலைத்து நிற்கின்றனர். ஆரம்பத்தில் சினிமாவில் ஆர்வமாக நடிப்பார்கள் ஆனால் காலப்போக்கில் படங்கள் வெற்றியடைந்து விட்டால் அதன் பிறகு பெரிய அளவில் படங்களில் நடிப்பதற்கு கவனம் செலுத்த மாட்டார்கள்.

ஆரம்பத்தில் வெற்றியடைந்து பின்பு வெற்றியை தக்க வைக்க முடியாமல் போன நடிகர்கள் ஏராளம் உள்ளனர். தமிழில் ஒருசில படங்கள் மூலம் வில்லனாக நடித்து பிரபலமானவர் பாபு ஆண்டனி. அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தன.

அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு வில்லனாக பல படங்களில் வெற்றி கண்டார். ஆனால் சமீப காலமாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் காக்கா முட்டை ஆகிய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தார்.

இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவரது மகனான ஆர்தர் பாபு ஆண்டனி ‘தி கிரேட் எஸ்கேப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவரும் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் படமே ஆக்சன் படமாக நடித்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் அவரது நண்பர்கள் கூறி வருகின்றனர்.