இந்த மனுஷன் கிட்ட நிறைய கத்துக்கணும்.. பிரபல நடிகரை புகழ்ந்து தள்ளிய ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக அசத்தி வந்த ஆண்ட்ரியா கார்த்தியின் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகரை புகழ்ந்து பேசியுள்ளார்.

ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கு மொழிகளில் பின்னணி பாடகியாக பணியாற்றியுள்ளார். இவருடைய தனித்துவமான குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் 2012ல் வெளியான திரைப்படம் துப்பாக்கி.

இப்படத்தில் இடம்பெற்ற கூகுள் கூகுள் பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இப்பாடலைப் விஜய் உடன் இணைந்த ஆண்ட்ரியா பாடியிருந்தார். இதைப் பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஆண்ட்ரியா, பல நடிகர்களுடன் பாடி உள்ளேன் ஆனால் விஜய்யுடன் பாடிய போது தனக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், துப்பாக்கி படத்திற்கு முன்னதாக நடிகர் விஜய் அவர்களை நான் பார்த்ததே கிடையாது. முதல் முறையாக துப்பாக்கி படத்தின் செட்டில் தான் விஜய்யை சந்தித்தேன். அந்த படத்தில் பணியாற்றியதன் மூலம் நானும் விஜய் ரசிகராகவே மாறிவிட்டேன். ஏனென்றால் விஜய் அந்த அளவுக்கு யதார்த்தமாக பழகக்கூடியவர்.

புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதன் எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடியும் என்பது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் ஒரு பெரிய நடிகர் மாதிரி அவர் நடந்து கொள்ளமாட்டார். ரொம்ப யதார்த்தமான மனிதன் எல்லோரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் விஜய் என ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

மேலும் ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் விஜய் ஒரு நல்ல மனிதன் என ஆண்ட்ரியா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானாவுக்கு ஆண்ட்ரியா தான் குரல் கொடுத்துள்ளார். தற்போது ஆண்ட்ரியா விஜயைப் பற்றி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.