இந்த நடிகையை போல ஒரு ரவுண்ட் வர வேண்டும்.. பேராசை பிடித்த கேஜிஎப் நடிகை

தற்போது கே ஜி எஃப் 2 படம் இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் சமூக வலைத்தளங்கள், செய்தித்தாள்கள் என எங்கு திரும்பினாலும் கேஜிஎஃப் படத்தைப் பற்றிய செய்திதான். இப்படத்தில் ஹீரோவாக நடித்த யாஷ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து இப்படத்தில் மிகவும் பிரபலமான மற்றொரு கதாபாத்திரம் பிஎம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரவீனா டாண்டன். இவர் பெரும்பாலும் பாலிவுட் படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் ஒரு சில தமிழ் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

பி வாசு இயக்கத்தில் வெளியான சாது படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு ஜோடியாக ரவீனா நடித்திருந்தார். மேலும், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்தில் தேஜஸ்வினி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில் கேஜிஎஃப் படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ரவீனா தனக்கு இருக்கும் பெரிய ஆசை பற்றி கூறியுள்ளார். அதாவது தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில கதாபாத்திரங்கள் உள்ளது. அதில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி மற்றும் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரங்களை வேறு யாரும் இந்த அளவுக்கு நடித்திருக்க முடியாத அளவிற்கு திறம்பட செய்து இருப்பார்.

அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினியே படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் மிஞ்சி இருப்பார் ரம்யாகிருஷ்ணன். இந்நிலையில் ரவீனா நீலாம்பரி, ராஜமாதா சிவகாமி போன்ற கேரக்டர்களை பண்ண வேண்டும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதிலும் நீலாம்பரி மாதிரி ஒரு மாசானம் வில்லி ரோல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் ரம்யாகிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரைப் போல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. மேலும், இது மாதிரியான கதாபாத்திரங்களுக்காக நான் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.