இந்த நடிகர் இல்லாமல் சந்திரமுகி 2 இல்லை.. பேயிக்கே பூச்சாண்டி காட்டபோகும் பிரபலம்

வைகைப்புயல் வடிவேலு தயாரிப்பாளர் இயக்குனர் ஷங்கருக்குமான பிரச்சினை இப்போது பேசி முடிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து நடிகர் வடிவேலு இப்போது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் 23ஆம் புலகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் செயல்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் வடிவேலுவின் காமெடிகளுக்கு பஞ்சம் தராத படமான சந்திரமுகி சூப்பர் ஸ்டார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி படையப்பா படத்தின் வசூல் சாதனையை முறியடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. என்னதான் தெலுங்கு ரீமேக் படம் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு அது புதுமைதான்.

எல்லோருக்குமான ரோலை வலுப்படுத்தியிருந்தார் இயக்குனர் பி.வாசு இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முயற்ச்சியை எடுத்துள்ளது படக்குழு.

அதன்படி ராகவா லாரண்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு காமெடியனாக வருகிறார் என்ற செய்தி வைகைப்புயல் ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

24ஆம் புலிகேசி லைகா நிறுவனத்தோடு ஒரு படம் (அந்த படத்திற்கான டைட்டில் விவகாரம் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது) அதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் சில நிமிடங்கள் சூப்பர் ஸ்டார் தோன்றுவார் என்ற செய்தி ஏற்கனவே வந்திருந்தது. ஆனால் அதை ஏதும் இப்போது வரை படக்குழு உறுதிப்படுத்தியதாய் தெரியவில்லை எனினும் சிவலிங்கா படத்தில் இணைந்த வடிவேலு ராகவா லாரண்ஸ் கூட்டணி மீண்டும் சந்திரமுகி2 படத்தில் இணைகிறது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

அப்பா சொல்லியும் கெத்து காட்டிய தனுஷ்.. விஜய்யுடன் நடிக்க மறுத்த சம்பவம்

நடிகரும், இயக்குனருமான வெங்கடேஷ் நடிகர் விஜய்யை வைத்து பகவதி என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கி இருந்தார். விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறியதற்கு இந்தத் திரைப்படமும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. ரீமாசென், வடிவேலு, ...